இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி நேற்று தனது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தன்னோட ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருபவர். அவரின் செயல்பாடுகள் அனைத்துமே அவரின் எதிர்ப்பாளர்கள் கூட ரசிக்கின்ற வகையில் அமையும். கிரிக்கெட்டுக்கு அப்பால் தோணி செய்யும் ஒவ்வொரு செயலும் அதிகமாகவே பரப்பப்பட்டு வந்த நிலையில் சமீபகாலமாக அவரின் குடும்பத்தில் உள்ளவர்களின் நிகழ்வுகளும் பிரபலம் ஆகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தோனியின் மகள் ஷிவா விராட் கோஹ்லியிடம் பேசும் வீடியோ வைரல் ஆனது, அதை தொடர்ந்து செலிப்ரட்டிக் கால்பந்து போட்டியில் தோனிக்கு தண்ணீர் கொடுக்கும் வீடியோ மற்றும் ஷிவா மலையாளத்தில் பாடும் வீடியோவும் வைரல் ஆனது, அந்த வரிசையில் தற்போது தோனியின் மனைவி சாட்சியின் பிறந்தநாள் கொண்டாட்டமும் இணைந்துள்ளது
MS Dhoni spends quality time, celebrates wife Sakshi's birthday in style