சசிகலாவிற்கு மீனம் ராசி, ரேவதி நட்சத்திரம். விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சி அடையும் சனிபகவானால் சசிகலாவிற்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்வோம். ஜெயலலிதாவின் பின்னாடியே இருந்தவர் சசிகலா. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் கட்சியில் முக்கிய பொறுப்புக்கு வந்தார். முதல்வராக நினைத்தால் அது முடியவில்லை. மாறாக சிறை சென்றார். விதி விடாமல் விரட்டுகிறது என்பது போல ரெய்டு சம்பவங்கள் சசிகலாவின் தூக்கத்தை தொலைத்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த குரு பெயர்ச்சியும் சசிகலாவிற்கு சரியில்லை. 8ல் குரு நின்று கொண்டிருக்கிறார். அதேபோல வரக்கூடிய சனிப்பெயர்ச்சி சசிகலாவிற்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
சசிகலாவின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம். அதாவது புதனுடைய நட்சத்திரம் சசிகலா. சசிகலாவின் லக்னம் சிம்ம லக்னம். சசிகலாவின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம். கோசாரத்தில் 10ல் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி மற்றும் ஏழரைச் சனி காலங்களில் தொழில் சம்பந்தமான பிரச்னையால் தொழில் நஷ்டம், தொழில் மாற்றம், இடமாற்றம் கண்டிப்பாக ஏற்படும் என்பது நியதி. சசிகலாவிற்கு இம்முறை ராசிக்கு 10ல் சனி வந்து அமர்ந்துள்ளார்.
சசிகலாவிற்கு 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீன ராசிக்கு அஷ்டமத்துச் சனி நடைபெற்ற போது அவமானத்தை சந்தித்தார் சசிகலா. ஜெயலலிதாவை விட்டு பிரிந்தார். அஷ்டமச் சனியில் சில ஏமாற்றங்கள், இழப்புகள் இருக்க வேண்டும். அது சசிகலாவிற்கு சரியாகவே இருந்தது.
sani peyarchi predictions for Sasikala's meena rasi.