ஊழல் குற்றச்சாட்டுகள்.. காங்கிரசுக்கு ஏற்பட்ட கதிதான் மோடி அரசுக்கு ஏற்பட போகிறது- வீடியோ

Oneindia Tamil 2017-11-20

Views 10.7K

ஐக்கிய முற்போக்கு கூட்டணியரசின் 2வது ஆட்சி காலத்தை போல மோடி அரசும் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் விடைபெறப்போகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிதம்பரம் கூறுகையில், நடக்க கூடாது என்று நான் நினைத்தாலும் கூட, 2019ல் மோடி அரசு பதவிக் காலம் நிறைவடையும் போது ஏகப்பட்ட ஊழல் புகார்களுடன்தான் அது விடைபெறும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 2வது பதவிக்காலத்தின் முடிவில் எப்படி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதோ அதே நிலைதான் இப்போது பாஜக அரசுக்கும் ஏற்படப்போகிறது என்று அவர் கூறியுள்ளார்.

குஜராத்தைவிட தமிழகமும், கேரளாவும் சமூக பொருளாதார ரீதியாக முன்னேறிய மாநிலங்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற கருத்தை அவர் ஏற்கனவே ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்த நிலையில், இப்போது டிவிட்டரில் புள்ளி விவரங்களோடு மீண்டும் அதை தெளிவுபடுத்தியுள்ளார் சிதம்பரம்.

Congress leader P. Chidambaram has warned that as the Narendra Modi government inched closer to the end of its term, it might also be assailed by the same degree of corruption allegations which drowned the United Progressive Alliance (UPA) 2

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS