சென்னையில் அடுத்த வாரம் முதல் 3 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நார்வே வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த 30-ஆம் தேதி முதல் தீவிரமடைந்தது. அன்றிலிருந்து ஒரு 10 நாள்களுக்கு சென்னையில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் சென்னையில் மழை படிப்படியாக குறையும் என்று கூறப்பட்டது. அதன்படி வானிலையும் மாறி தற்போது வெயில் கொளுத்துகிறது.
சென்னையில் முகப்பேர், அண்ணாநகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த வாரம் வங்கக் கடலில் இரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னை மழை குறித்து நார்வே வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நாளையும், நாளை மறுநாளும் மிதமான மழை பெய்யும். அடுத்த வாரத்தில்தான் மழை வெளுக்கும்.
Norway weather report says that from next week Chennai will get heavy rainfall. Tomorrow and day after tomorrow will get moderate rain