எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் உறுதி.. வீடியோ

Oneindia Tamil 2017-11-18

Views 3.2K

பீகார் லாஜிக்படி இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிமுகவினர் குஷியில் உள்ளனர். பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் திடீர் திருப்பமாக கடந்த ஆகஸ்ட் மாதம் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இருந்த கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், மறுநாளே பாஜக ஆதரவுடன் முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார். பா.ஜ.க.வை சேர்ந்த சுஷில் குமார் மோடி துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.

நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் கடும் அதிருப்தி அடைந்தார். நிதிஷ் குமாருக்கு எதிராக சரத் யாதவ், தேர்தல் கமிஷனில் கட்சி மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி மனு அளித்தார்.

Edappadi faction may get Double leaves symbol, as like as Nitish Kumar gets his symbol, says sources.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS