விவசாயிகள் பிரச்னை பேசும் விஜய்யின் அடுத்த படம்!- வீடியோ

Filmibeat Tamil 2017-11-17

Views 1.9K

மெர்சல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் அடுத்து யார் படத்தில் நடிக்கப்போகிறார் எனும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. மெர்சல் படம் வெளிவருவதற்கு முன்பே கசிந்த தகவல்படி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். விஜய்யின் திரைப் பயணத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய படங்கள் முக்கியமானவையாகும். சமூக நோக்கத்துடன் எடுக்கப்பட்ட அந்தப் படங்களைப் போலவே மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 62-வது படமும் உருவாகிறது. இந்தப் படத்தில் 'கத்தி' படத்தைப் போலவே விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதில் மாற்றுத்திறனாளி வேடம் ஒன்றிலும் நடிப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. மெர்சல் படத்தில் இலவச மருத்துவம் குறித்து பேசிய விஜய், இந்த புதிய படத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் பேச இருக்கிறாராம். சமீபகாலமாக தமிழகத்தில் விவசாயிகள் மத்தியில் வெடித்துள்ள ஹைட்ரோ கார்பன் போராட்டம் உள்ளிட்ட சில விவசாய பிரச்னைகளுக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதாம். அதனால் விஜய், விவசாயியாக நடிக்கயிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Vijay's 62nd film is being directed by AR Murugadoss. The film will be about farmer's issues, including the Hydro carbon protest that broke out among farmers in Tamil Nadu.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS