கொள்ளை கூட்டத்தின் தலைவனான போலீஸ்- வீடியோ

Oneindia Tamil 2017-11-17

Views 2.5K

டெல்லி குற்றப்பிரிவில் மிக முக்கிய அதிகாரியாக வலம் வந்த 'அஸ்லுப் கான்' என்ற போலீஸ்காரர் 6 மாதங்களுக்கு முன்பு திடீர் என்று காணாமல் போனார். போலீசார் இவரை பல நாட்களாக தேடி வந்தனர். தற்போது இவர் பெரிய கொள்ளை கூட்டத்திற்கு தலைவராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் நடந்த முக்கியமான பல ஏடிஎம் கொள்ளைகளுக்கு பின் இந்த குழு இருந்து செயல்பட்டுள்ளது. கேரளாவில் வேறு ஒரு குற்றத்தின் விசாரிக்க சென்ற போலீசார் இந்த குற்றத்தை கண்டுபிடித்து உள்ளனர். போலீஸ் ஒருவரே இவ்வளவு பெரிய டானாக உருவெடுத்த சம்பவம் மொத்த காவல்துறையையும் அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது.

டெல்லி குற்றப்பிரிவில் முக்கியமான தலைமை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார் அஸ்லுப் கான். இவர் சரியாக எட்டு மாதங்களுக்கு முன்பு 20 நாள் விடுப்பு கேட்டு வீட்டிற்கு சென்றார். சரியாக ஒருமாதம் முடிந்த பின் மீண்டும் 20 நாள் விடுப்பு கேட்டு இருந்தார். ஆனால் இரண்டு மாதம் முடிந்த பின்பும் அவர் தனது பணிக்கு திரும்பவில்லை. ஆறுமாதம் போலீசார் அவரை தேடி இருக்கின்றனர். அவர் பணிக்கு திரும்பாததால் அவரை பணி இடை நீக்கம் செய்தனர்.

An officer from Delhi Police's crime branch had mysteriously gone missing for six months. Now police found that he is the alleged mastermind of a gang that robbed banks and ATMs across the country.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS