காதலிக்காக எதையும் செய்யும் காதல் நாயகர்கள் பற்றிய பல படங்கள் பார்த்திருக்கோம். இதுவும் அப்படி ஒரு படம். முன்பெல்லாம் காதலிக்காக கண்ணைத் தருவார்கள், நாக்கை வெட்டிக் கொள்வார்கள். இந்தப் பட நாயகன் காதலியின் காணாமல் போன செருப்பை படம் முழுக்கத் தேடுகிறான். ஆனந்தியும் தமிழும் கல்லூரி மாணவர்கள். ஆனந்தியை ரொம்ப நாளாக ஒரு தலையாகக் காதலித்து பின் தொடர்ந்து கொண்டிருப்பவர் யோகி பாபு. அவருக்கு நண்பனாக கூடவே போவதுதான் தமிழுக்கு வேலை. ஒரு நாள் ஆனந்தியைப் பார்த்ததும் தமிழும் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். அவரும் ஆனந்தியை பின்தொடர ஆரம்பிக்கிறார். ஒரு நாள் பேருந்தில் ஏறும் ஆனந்தியின் ஒரு செருப்பு தவறி விழுந்து விடுகிறது. மற்றொரு செருப்பை ஆனந்தி பேருந்திலேயே விட்டுவிட்டுப் போகிறாள். இதை தமிழ் பார்க்கிறான்.வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் ஆனந்தியின் அப்பா ஜெயப்பிரகாஷை தீவிரவாதிகள் கடத்தி பிணைக் கைதியாக வைத்துக் கொண்டு தங்கள் தேவைகளை நிறைவேற்றுமாறு மிரட்டுகிறார்கள். இதில் மனம் கலங்கும் ஆனந்தியும் அம்மா ரேகாவும், குறி கேட்கப் போகிறார்கள். குறி சொல்பவர் தமிழின் அம்மா. ஆனந்தியின் அப்பா கடத்தப்பட்ட நாளில் நடந்த விஷயங்களை குறி சொல்பவர் கேட்க, அன்று தன் செருப்பு காணாமல் போனதையும் சொல்கிறார் ஆனந்தி. அந்த செருப்பை மீண்டும் காணும்போது ஜெயப்பிரகாஷ் வந்துவிடுவார் என அஜித் ஆட்டோ கண்ணாடியைத் திருப்பிய லாஜிக்குடன் சொல்கிறார் குறி சொல்பவர். இதை மறைந்திருந்து கேட்டுவிடுகிறார் நாயகன் தமிழ்.
KP Jagan's 4th movie En Aaloda Seruppa Kaanom review