திருந்தவே மாட்டீங்களாப்பா.. லட்சுமி குறும்பட டீம் வெளியிட்ட மற்றொரு சர்ச்சை வீடியோ!

Oneindia Tamil 2017-11-16

Views 7

லட்சுமி குறும்பட டீம் மற்றொரு சர்ச்சைக்குரிய வீடியோவோடு களமிறங்கியுள்ளது. சர்ஜுன் இயக்கத்தில் வெளியான 'லட்சுமி' என்ற குறும்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்தக் குறும்படம் கௌதம் மேனனின் 'ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' யூ-ட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது. இந்த 'லட்சுமி' படத்தில் லக்ஷ்மி ப்ரியா என்ற நடிகை ஹீரோயினாக அரிதாரம் பூசியிருந்தார். கள்ளக்காதல் அடிப்படையிலான படம் என்பதால் சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் மீதான விமர்சனங்களால் அதிகமாக வைரலானது. படத்தில் கள்ளக்காதலன், ஹீரோயினை தன் வழிக்கு கொண்டுவர பாரதியாரின் கவிதைகளை சொல்லி காண்பிக்கும் காட்சி இருந்தது. இதுவும் கடும் விமர்சனங்களை சந்தித்தது. இப்படி விமர்சனங்கள் உள்ள நிலையிலும், மீண்டும் ஒரு வீடியோவை அதே டீம் வெளியிட்டுள்ளது. பாரதியாரின் வரிகளில், கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் உருவான நிமிர்ந்த நன்னடை என்ற பாடலை இயக்குநர் சர்ஜுன் மற்றும் ஶ்ரீராதா ஶ்ரீநாத் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.

'Lakshmi' short film controversy is still not complete, lyrical video on 'Lakshmi - Nimirndha Nannadai' is being released on 'Ondraga Entertainment' You-Tube channel.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS