'AAA' பார்ட் 2 இல்லை - மீண்டும் இணைந்த 'வெர்ஜின் பசங்க' கூட்டணி- வீடியோ

Filmibeat Tamil 2017-11-15

Views 2

தமிழ் சினிமாவில் தற்போது அடல்ட் கன்டென்ட் படங்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அண்மையில் வெளியான 'ஹர ஹர மகாதேவகி' படத்திற்கு முன் வெளியாகி வசூலைக் குவித்த அடல்ட் கன்டென்ட் படம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'. இந்தப் படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். அவர் மீண்டும் ஜி.வி.பிரகாஷை வைத்து ஒரு படம் இயக்குகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் முதலானோர் நடிப்பில் வெளியானது 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'. முழுவதும் இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பிய இந்தப் படம், பலரது எதிர்ப்புகளைப் பெற்றது. அதேசமயம், வசூலையும் வாரிக் குவித்தது. 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற படத்தை இயக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். ஸ்ரேயா, தமன்னா என இரண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தனர். படம் எடுக்கும்போது ஏகப்பட்ட காட்சிகளை எடுத்துவிட்டதால், இரண்டு பாகங்களாக படத்தை வெளியிடப் போகிறோம் என்று அறிவித்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக படம் ஊத்திக் கொண்டதால், இரண்டாம் பாகம் கிடப்பில் இருக்கிறது.

GV Prakash has acted in the film 'Trisha illana Nayanthara' directed by Adhik Ravichandran. Simbu acted in Adhik Ravichandran's second film 'AAA'. He is directing a new film with GV Prakash. Sonia Agarwal plays an important role in this film.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS