நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது எதிர்பாராத விதமாக வெடித்ததில் ரவுடியின் கை துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை வாழைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் எலிகார்த்திக். பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் இவர் மீது உள்ளது. போலீசாரின் ரவுடிகள் லிஸ்டில் இவர் பெயரும் உள்ளது. இவர் இன்று காலை நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொண்டிருக்கும் போது அது எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. இதில் கார்த்திக்கின் கை துண்டாகியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எலி கார்த்திக் புதுவையில் பிரபல ரவுடி டிராக் சிவாவின் கூட்டாளி என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Dis : Rudy's hand triggered an unexpected incident when the bomb blast produced .