ராஜீவ் கொலை வழக்கு... சில உண்மையை மறைத்தது ஏன்... ?- வீடியோ

Oneindia Tamil 2017-11-15

Views 2

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு அவரை கொல்வது குறித்த திட்டமே தெரியாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கின் முன்னாள் அதிகாரி தியாகராஜன் தெரிவித்துள்ளார். கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை முடிவடைந்த நிலையில் இன்னும் விடுவிக்கப்படாமல் சுமார் 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலேயே இருந்து வருகின்றனர்.இந்நிலையில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்கு 2 மாதங்கள் பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து பரோல் காலம் முடிவடைந்து பேரறிவாளன் சிறை சென்றுவிட்டார். இந்த நிலையில் தற்போது அந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜன் வெளிச்சத்திற்கு வந்துள்ளார். அவர்தான் பேரறிவாளனின் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.


Perarivalan was convicted as a plotter in the Rajiv Gandhi assassination case, a former CBI officer involved in the investigation has told the Supreme Court that the convict did not know of the plan to kill the former PM.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS