இலங்கைக்கு எதிராக, உள்நாட்டில் நடந்த டெஸ்ட் மற்றும் டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்தித்ததில்லை என்ற சாதனையை தொடரும் முனைப்புடன் இந்திய கிரி்க்கெட் அணி கோல்கத்தாவில் களமிறங்குகிறது. மூன்று டெஸ்ட்கள், மூன்று ஒருதினப் போட்டி, மூன்று டி-20 போட்டித் தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி வந்துள்ளது. டெஸ்ட் போட்டித் தொடர், கோல்கத்தாவில் 16ம் தேதி துவங்குகிறது.
கடந்த, 2015ல், இலங்கைக்கு எதிராக இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, தொடர்ந்து, எட்டு டெஸ்ட் போட்டித் தொடரை வென்று, உலகத் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தாண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், இலங்கைக்கு பயணம் செய்த இந்திய அணி, 3 டெஸ்ட்கள், 3 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் என, அனைத்திலும் வென்று, ஒயிட்வாஷ் செய்த
Indian cricket team ready for another series victor