பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாச்சியார் படத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாலா இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில் மக்கள் விரும்பும்படி வித்தியாசமான படங்களை கொடுத்து வரும் பாலா இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் நாச்சியார்.
இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜோதிகா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், படத்தின் டீசரை நடிகர் சூர்யா நாளை மாலை 6 மணிக்கு அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலாவின் பி ஸ்டுடியோஸ் மற்றும் இயோன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படம் டிசம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.