`கலகலப்பு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. சுந்தர்.சி இயக்கி வரும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, காசி, இந்தூர், புனே மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றி இருப்பதாக அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/11/14112355/1128707/Exciting-update-from-Kalakalappu-2-team.vpf