அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என அவர் கூறினார்.
காற்றழுத்த தாழ்வுப்பழுதியின் நகர்வைப் பொறுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். காற்றழுத்த தாழ்வுப்பகுதி மத்திய வங்கக்கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தற்போது வரை 11% குறைவாக பெய்துள்ளதாகவும் பாலச்சந்திரன் கூறினார். நாளை முதல் படிப்படியாக மழை குறையத் தொடங்கும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக பொன்னேரிய்ல 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.
The Meteorological depaetment said that in the next 24 hours moderate rainfall in some of the coastal districts of North Tamilnadu. Rains will reduce from tomorrow Chennai meteorological center.