ஆற்றில் திருட்டு மணல் அள்ளுவதற்கு வருவாய் அலுவலர்கள் துணை போவதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
விருது நகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது படந்தால் கிராமம். 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்திற்கு செல்ல வேண்டும் எனில் இங்குள்ள வைப்பாறுவை தாண்டித்தான் செல்ல வேண்டும். சாத்தூர் பகுதிகளில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஆற்றில் திருட்டு தனமாக மணல்கள் அள்ளி கடத்தப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டிய வருவாய்துறையினரே திருட்டு கும்பலுக்கு துணை போவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The civilians landed in the river and accused the Revenue Officers of supplying the sand in the river.