சிகரெட் உட்பட 50 பொருட்களுக்கு மட்டுமே இனி 28% ஜிஎஸ்டி வரி!- வீடியோ

Oneindia Tamil 2017-11-10

Views 1

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒரே வரி என்ற அடிப்படைக்கு இதனால் மாறியது. ஜிஎஸ்டி வரி 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது. அதிலும் சில சொகுசு பொருட்களுக்கு ஜிஎஸ்டியுடன் கூடுதலாக செஸ் என்ற வரியும் விதிக்கப்படுகிறது.

இந்த வரி விதிப்பிலுள்ள குறைகளை சீர் செய்ய மாதம் தோறும், மத்திய நிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

தங்கள் மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகளை நிதி அமைச்சர்கள் எடுத்துரைத்து விவாதிப்பார்கள். இறுதியில் அவர்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும். பரிசீலிக்க முடியவில்லை என்றால் அதற்கான காரணம் தெரிவிக்கப்படும், அல்லது அடுத்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யலாம் என மத்திய நிதி அமைச்சர் கூறுவது வழக்கம்.

இந்தநிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் 23வது கூட்டம் அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் நிதியமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அதேபோல பிற மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.

GST Council keeps only 50 items out of 223 in highest slab; 173 items to become cheaper.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS