டி20 போட்டியில் சிங்கிள் ரன் தராமல் 10 விக்கெட் வீழ்த்திய கில்லி- வீடியோ

Oneindia Tamil 2017-11-09

Views 21.7K

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த ஒரு உள்ளூர் போட்டியில் சிறுவன் ஒருவன் ஒரு ரன் கூட கொடுக்காமல் தனி ஆளாக 10 விக்கெட் எடுத்து இருக்கிறான். இதன் மூலம் அவன் எதிரணியை நான்கு ஓவரில் மொத்தமாக சுருட்டி இருக்கிறான். இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். நேற்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ளூர் டி-20 போட்டி ஒன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 'திஷா கிரிக்கெட் அகாடமி', 'பியேர்ல் கிரிக்கெட் அகாடமி' ஆகிய இரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பியேர்ல் கிரிக்கெட் அகாடமி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.
இதையடுத்து முதலில் களம் இறங்கிய திஷா கிரிக்கெட் அகாடமி மிகவும் அதிரடியாக ஆடியது. 20 ஓவர் முடிவில் இந்த அணி 156 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பியேர்ல் கிரிக்கெட் அகாடமி பேட்டிங் பிடிக்க களம் இறங்கியது.ஆனால் அந்த அணி தொடக்கத்தில் இருந்து திணற தொடங்கியது. திஷா கிரிக்கெட் அகாடமியை சேர்ந்த ஆகாஷ் சவுத்ரி என்ற 15 வயது சிறுவன் மிகவும் சிறப்பாக பந்து வீசினான். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவன் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட் எடுத்தான்.

A boy in Rajsthan takes 10 Wickets For No Run In T20 Match. Boy called Akash Choudhary achieved this in local T20 tournament.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS