நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒன்டே மற்றும், டி20 தொடர்களை இந்தியா வென்ற நிலையில், மனைவி சாக்ஷியுடன், ஜாலி மூடில் டான்ஸ் ஆடியபடி உள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோணி. என்னதான் பெரிய தல என்ற போதிலும், குடும்பத்தாரோடு குழைந்தபோல மாறிவிடுவார் டோணி. சமீபத்தில் தனது செல்ல நாய்க்குட்டியுடன் அவர் ஜாலியாக விளையாடிய வீடியோ வெளியாகியிருந்தது. அதே போல தனது செல்ல மகளுடன் அவர் கொஞ்சும் போட்டோக்களும் வெளியாகியிருந்தன.
சென்னை விமான நிலையத்தில் அவர் தரையில் படுத்து இருந்த போட்டோவும் பலராலும் ஷேர் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான், இப்போது மனைவி சாக்ஷியுடன் சேர்ந்து அவர் அடித்த ஜாலி கூத்து தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை ஒரு பெண் ஷூட் செய்துள்ளார். சாக்ஷி அமர்ந்திருக்க அவர் முன்பாக டோணி செமையாக ஆட்டம் போடுகிறார். இதை பார்த்த சாக்ஷியால் சிரிப்பை மறைக்க முடியவில்லை. சத்தம் போட்டு சிரிக்கிறார்.
Mahendra Singh Dhoni is adored around the globe for his skills on the field and coolness off it. Here's a reason why 'Mahi' is a fun man to be around