காங்கிரஸை வெளுத்து வாங்கிய நிர்மலா சீதாராமன்- வீடியோ

Oneindia Tamil 2017-11-08

Views 4K

காங்கிரஸ் ஆட்சியில் வெளிப்படையாகவே ஊழல் நடந்தது என்று சென்னையில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகார் தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிவடைகிறது. இதை எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். எனினும் ஆளுங்கட்சியினர் கருப்பு பணம் ஒழிக்கப்பட்ட நாளாக கொண்டாடி வருகின்றனர். உயர் ரக ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தனர். இதற்காக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆங்காங்கே போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில் சென்னை தி.நகரில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கணக்கில் வராத பணத்தை வெளியே கொண்டுவரவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Defence Minister Nirmala Seetharaman says that demonetisation crabs terror funding, violence incidents. I am concerned about what Manmohan Singh comment on Demonetisation.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS