இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணிக்கு, கேப்டன் விராட் கோஹ்லி முழு ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில், டோணி மெதுவாக ஆடியதுதான் இந்திய தோல்விக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் திருவனந்தபுரம் டி20 போட்டியில் கடைசி நேரத்தில் டோணி இறங்கினார். ஆனால் ஒரு பந்தையும் சந்திக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருப்பினும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.போட்டிக்கு பிறகு டோணி மீதான விமர்சனங்கள் குறித்து கேப்டன் கோஹ்லி கூறுகையில், ஒரு வீரர் களமிறங்கும் நேரத்தை கணக்கில் எடுக்க வேண்டும். அந்த இடத்தில் களமிறங்கும்போது உடனே ரன் எடுக்க முடியாது. அப்போட்டியில் பாண்ட்யா கூடத்தான் ரன் எடுக்கவில்லை. ஆனால், ஏன் எப்போதுமே டோணியை நோக்கி கை நீட்டுகிறீர்கள்.ஒரு வீரரை மட்டுமே குறி வைப்பது சரியான நடைமுறை இல்லை. டோணி களமிறங்கியபோது, ஓவருக்கு சுமார் 9 ரன்கள் தேவைப்பட்டது. பிட்ச்சும் கூட, முதல் இன்னிங்சில் நியூசி. ஆடியபோது இருந்ததை போல பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இல்லை. ஏற்கனவே களத்தில் நிற்பவர்களால் பந்தை கணித்து அடித்து ஆட முடியும். அதைத்தான் நான் செய்தேன். புதிதாக களத்திற்குள் வரும் பேட்ஸ்மேன்கள் முதல் பந்திலேயே அதை செய்ய முடியாது.
First, I don’t understand why are people only pointing him out, I’m not able to understand this,” said the Indian skipperVirat Kohli.