இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற இந்திய அணி 68 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி-20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்க உள்ளது. கடைசியாக நடந்த இரண்டு தொடர்களிலும் கடைசி போட்டியிலேயே தொடர் வெற்றிக்கான முடிவு தெரிந்தது.
அதுபோன்ற ஒரு சூழ்நிலை மீண்டும் உருவாகியுள்ளது. நியூசிலாந்து அணி, 3 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டித் தொடர்களில் விளையாட வந்துள்ளது. ஒருதினப் போட்டித் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. டில்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்தியா வெற்றி பெற, ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது டி-20ல் நியூசிலாந்து வென்றது
இந்த நிலையில் இன்னிக்கு நடக்க இருந்த போட்டியில் மழை குறிக்கிட்டதால் போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது அதுதான் படி முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை எடுத்துள்ளது
The third T-20 match between India and New Zealand has started in Thiruvananthapuram, Kerala now. New Zealand need 68 runs to win