பரமகுடியில் 1954ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி ஸ்ரீநிவாசன் ராஜலெட்சுமி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் கமலஹாசன். இவருக்கு உடன் பிறந்த சகோதரர் சாருஹாசன். இவரும் திரைப்படதுறையில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். கமலஹாசனின் சகோதரி நளினி. கிளாசிக் டான்சர். கலைதுறை குடும்பத்தை சேர்ந்த கமல் 1960 ம் ஆண்டு வெளிவந்த களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திமாக அறிமுகமானார். பின்னர் தங்கப்பன் என்ற டான்ஸ்மாஸ்டரிடம் உதவி நடனகலைஞராக பணியாற்றினார். அதன் பின்னர் உதவி இயக்குனராக பணியாற்றிய கமல் இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கிய அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்தார். அதன் பின்னர் பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், கதாசிரியர் என்று பலதுறைகளில் முத்திரை பதித்தவர் கமலஹாசன். மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகளையும் பிலிம்பேர் விருது பிரான்ஸ் நாட்டு விருது என்று ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். உலக நாயகன் என்ற பட்டத்தை பெற்ற கமலஹாசனின் 63 வது பிறந்த தினம் இன்று…
Dis : Actor kamal birthday