#Chennai rain update இன்றும், நாளையும் எப்படி இருக்கும்?- வீடியோ

Oneindia Tamil 2017-11-06

Views 13.9K

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்ததால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. பல தனியார் வானிலை ஆய்வாளர்களும் இதையே கூறியிருந்தனர்.

இந்நிலையில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில், உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிள்ளது. மேலும் தென் தமிழகம், டெல்டா, கடலோர மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

A new low depression has formed in Bay of Bengal said Chennai meteorological center. Delta districts will get very heavy rain by this low.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS