மழை வந்தால் வெள்ளம் ஏற்படுவது இயற்கையானது தான்- சரத்குமார்-வீடியோ

Oneindia Tamil 2017-11-06

Views 351

மழை வந்தால் வெள்ளம் ஏற்படுவது இயற்கையானது தான் என்றும் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சரத்குமார் தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் சாமி தரிசனம் செய்ய சென்றார். தரிசனத்திற்கு பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மழை வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் அரசு மீட்புபணிகளையும் உதவிகளையும் செய்து வருவதை துரிதபடுத்த வேண்டும் என்றார். முன்னால் 100 வீடுகள் இருந்த இடத்தில் தற்போது மூன்றாயிரம் வீடுகள் உள்ளது என்றார். மழை வெள்ளம் என்பது எல்லாம் இயற்கையானது தான் என்றும் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று சரத்குமார் கூறினார்.

Dis: Sarathkumar said that flooding would be natural and that people should cooperate with the government's actions.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS