#Chennai rain update! புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது- வீடியோ

Oneindia Tamil 2017-11-06

Views 32.7K

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்ததால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. பல தனியார் வானிலை ஆய்வாளர்களும் இதையே கூறியிருந்தனர்.இந்நிலையில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


A new low depression has formed in Bay of Bengal said Chennai meteorological center. Delta districts will get very heavy rain by this low.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS