2ஜி தீர்ப்பு தேதி நாளை வெளியாகும் நிலையில் கருணாநிதியுடன் மோடி சந்திப்பால் பரபரப்பு!- வீடியோ

Oneindia Tamil 2017-11-06

Views 9.8K

2ஜி வழக்கு விசாரணையில் தீர்ப்பு தேதி நாளை வெளியாக உள்ள நிலையில் சென்னையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கப்போவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவினருக்கு ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு எப்படி கழுத்திற்கு மேல் கத்தியாக தொங்கியதோ அதே போன்று திமுகவினரின் கழுத்திற்கு மேல் தொங்கும் கத்தி 2ஜி வழக்கின் தீர்ப்பு
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு 2004-2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள் வரை ஆட்சியில் இருந்தது. அதில் முதலாவது ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது.

2g specctrum case judgement is in final stage by the arrangement of Karunanidhi family, Modi is visiting DMK chief Karunanidhi at his Gopalapuram residence today.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS