இந்தியா தோல்விக்கு தோனியா காரணம்.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

Oneindia Tamil 2017-11-05

Views 17.4K

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டோணியின் ஆரம்ப கட்ட மந்தமான ஆட்டம்தான் இந்திய தோல்விக்கு காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. டோணி சிங்கிள்கள் தட்டி மறுமுனையில் நல்ல ஃபார்மில் இருந்த கோஹ்லிக்கு அடிக்க வாய்ப்பை வழங்காமல் அதிக பந்துகளை அவரே எடுத்துக்கொண்டார் என்பது டோணி மீதான குற்றச்சாட்டுக்கு முக்கிய காரணம்.
கடைசி நேரத்தில் அவர் அதிரடி காட்டினாலும், அதற்குள் நியூசிலாந்து அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்திவிட்டது. இருப்பினும் டோணியை அவரது ரசிகர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. இதோ சில டிவிட்டுகள்.

டோணி இந்த தோல்விக்கு காரணம் இல்லை. 6 பவுலர்களுடன் விளையாடும் முடிவை எடுத்தபோதும், சுமார் 200 ரன்களை அள்ளிக்கொடுத்துள்ளீர்கள். அப்போதே நீங்கள் பின்னடைவை சந்தித்துவிட்டீர்கள். பிளாட்பார்ம் சரியாக இருந்தால்தானே அடித்து ஆட முடியும்.

If dhoni is selfish then he would have completed his half century instead of going for hit"says Netizens.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS