டி20 போட்டியில் இந்தியா மோசமாக தோற்க 4 காரணங்கள்!

Oneindia Tamil 2017-11-05

Views 2.1K

2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த பல காரணங்கள் இருந்தாலும், அதில் முக்கிய காரணங்கள் சில உண்டு. டாஸ் வென்று, முதலில் பேட் செய்து, 196 ரன்கள் குவித்த நியூசிலாந்தை விரட்டி பிடித்து வெற்றிபெற முடியாமல் 156 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது இந்தியாவால்.
விராட் கோஹ்லி ஆட்டத்தை தவிர்த்து பார்த்தால் இந்தியாவிடம் நேற்று பாராட்டும்படி எதுவுமே இல்லை. டோணி கடைசி நேரத்தில் சில ஷாட்டுகளை ஆடினாலும் அது அணிக்கு தேவையில்லாத நேரத்தில் வெளியானதால் அதை விமர்சகர்கள் முழு மனதோடு பாராட்ட முடியவில்லை.
நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் இரண்டே விக்கெட்டுகளை இழந்து, 196 ரன்கள் குவிக்க இந்திய பந்துவீச்சு காரணம். அந்த அணி தொடக்க வீரர் கொலின் முன்ரோ வெறும் 58 பந்துகளில் 109 ரன்கள் குவித்து நாட்-அவுட்டாக நின்றது இதற்கு உதாரணம். அறிமுக வீரர் முகமது சிராஜ் 4 ஓவர்களில் 53 ரன்களை வாரி கொடுத்தார். ஒரு ஆறுதல் விக்கெட் கிடைத்தது.

Here are the 4 reasons why India defeated by New Zealand in 2nd T20 match.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS