அமெரிக்காவில் இருந்து வீடியோ வெளியிட்ட பி. சுசிலா- வீடியோ

Filmibeat Tamil 2017-11-03

Views 2.4K

என்னை பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். நான் நலமாக உள்ளேன் என்று பாடகி பி. சுசிலா அமெரிக்காவில் இருந்து வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகி பி. சுசிலா இறந்துவிட்டதாக இன்று காலை ஒரு தகவல் தீயாக பரவியது. விசாரித்தபோது தான் அது வதந்தி என்று தெரிய வந்தது. சுசிலா அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நலமுடன் இருப்பது தெரிய வந்தது.இது தெரியாமல் நடிகை ஆர்த்தி சுசிலா இறந்துவிட்டதாக அவசரப்பட்டு ட்வீட் போட்டு பின்னர் அதை நீக்கினார். இந்நிலையில் சுசிலா தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியாகியுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,வணக்கம் நேயர்களுக்கு. என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகிறது. ஏன் என்றால் நான் வெளிநாட்டுக்கு வந்தேன் அமெரிக்காவுக்கு. நாளைக்கு நம்ம நாட்டுக்கு நான் திரும்பி வருகிறேன். நான் வந்த பிறகு இன்டர்வியூ எடுக்கலாம். ஏதேதோ சொல்கிறார்கள் அதை எல்லாம் நம்பாதீர்கள்.




I’m perfectly fine, says singer p suseela after de@th rumours

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS