இந்து தீவிரவாதம் குறித்த கமல் கருத்து.. பாஜக, சிவசேனை கடும் எதிர்ப்பு!- வீடியோ

Oneindia Tamil 2017-11-02

Views 3

இந்து தீவிரவாதம் இல்லை என இனிமேல் சொல்ல முடியாத அளவுக்கு தீவிரவாதம் பரவியுள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரை, பாஜக, சிவசேனை கட்சியினரை கோபமடையச் செய்துள்ளது. தனது கருத்துக்கு, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. கமல் தனது கட்டுரையில் "எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்? என்ற சவாலை இனி அவர்கள் (இந்துக்கள்) விட முடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது.." என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், "கமல்ஹாசன் இதற்காக மன்னிப்பு கேட்பதோடு தனது வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். நிஜம் என்னவென்றால், இங்கு இந்துக்கள் பெரும்பான்மையின மக்களாக இருப்பதால்தான் அமைதி நிலவுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

After Tamil actor Kamal Hassan made yet another controversial statement over the phrase 'saffron terr0r' that the right wing cannot challenge anyone that there is no Hindu terrorism, Bharatiya Janata Party (BJP) demanded an apology on Thursday.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS