திமுக தலைவர் கருணாநிதியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று இரவு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.. கடந்த ஓராண்டாக முதுமை மற்றும் உடல்நிலை குறைவால் தீவிர அரசியலில் இருந்து கருணாநிதி ஒதுங்கி இருந்தார்.
அண்மையில் திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியின் பவளவிழா கண்காட்சி அரங்கத்தை 40 நிமிடங்கள் கருணாநிதி பார்வையிட்டார்.இதனைத் தொடர்ந்து கொள்ளுப்பேரன் மனுரஞ்சித் திருமணத்தை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி நடத்தி வைத்தார். இந்த நிலையில் இன்று இரவு 8.30 மணியளவில் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்றார். அவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் ராமதாஸுடன் பாமக தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
Dr Ramadoss met Karunanidhi