தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வடகடலோர மாவட்டங்களில் பலத்த பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 2 நாட்களகா வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Chennai meteorological center says heavy rain will continue in Tamilnadu and pudhcherry. Tamil Nadu north coastal districts will get heavy rain in next 24 hours said Chennai meteorological center. The North east monsoon intensified in the Tamil nadu said meteorological center.