கருணாநிதி கொள்ளுப்பேரன்-விக்ரம் மகள் திருமண வீடியோ

Filmibeat Tamil 2017-10-30

Views 16.4K

மு.க. முத்துவின் பேரன் மனுரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா திருமணத்தில் ஓராண்டிற்குப் பின்னர் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்றது குடும்பத்தினரை உற்சாகமடைய வைத்துள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஓராண்டாக பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் மருத்துவர்களின் ஆலோசனைப் படி சிகிச்சை பெற்று வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி. ட்ரக்யோஸ்டமி சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன. அவர் உடல்நலன் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.அண்மையில் பேரன் அருள்நிதியின் மகனை கருணாநிதி கொஞ்சும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து திமுக தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக எதிர்பாராத விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென மாலைப் பொழுதில் முரசொலி அலுவலகம் சென்று வைரவிழாவை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிட்டு சென்றார்.

DMK Chief Karunanidhi participated in his grandson Manu Ranjith wedlock with Actor Vikram's daughter after one year of his health issues. Karunanidhi's participation made their family membbers much happier.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS