ஏபிகே பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் உறுதிகொள். கிஷோர், மேக்னா, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்டோபர் 6 அன்று திரைக்கு வரவிருந்தது. ஜிஎஸ்டி பிரச்சனையால் புதிய படம் வெளியிடக் கூடாது என்ற தயாரிப்பாளர் சங்க முடிவால் வெளிவரவில்லை. நவம்பர் 3 அன்று திரையிட்டுக் கொள்ளலாம் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை ஏற்று திரைக்கு வருகிறது. ரேப் சீன் படத்தில் காட்சியாக இல்லை. இன்றைக்கு பெண்களுக்கு எதிராக நடக்குற கொடுமையை விளக்க கதையாகத்தான் சொல்லியிருக்கிறோம் என முறையிட்டோம். ரிவைஸ் கமிட்டியில் இரண்டு ஷாட் கட்டும் சில ஆடியோ கரெக்சனோட UA சான்றிதழ் கிடைத்தது.
It took 3 months to get censor certificate for Uruthikol movie due to rape scenes.