டிவிட்டர் என்பது வெறுப்புடன் சண்டை போட்டுக்கொள்வதற்கு மட்டுமல்ல, இதுபோல காதலை பரிமாறிக்கொள்ளவும்தான் என்பதை நிரூபித்துள்ளார்கள் விளையாட்டு துறை தம்பதிகளான சோயப் மாலிக் மற்றும் சானியா மிர்சா. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயப் மாலிக் மற்றும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இடையே காதல் மலர்ந்து திருமணம் நடைபெற்றது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இவர்கள் இருவருமே தங்கள் துறையில் இன்னும் பிஸியாக இருக்கும்போதும்கூட, காதலையும், பாசத்தையும் காட்டிக்கொள்ள மறந்ததில்லை. இப்படி ஒரு சம்பவம்தான் தற்போது அரங்கேறியுள்ளது.
இலங்கைக்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் அபாரமாக வென்றது.
A romantic moment between Pakistani cricketer Shoaib Malik and Indian tennis player Sania Mirza. The couple engaged in a romcom conversation.