பாஜக தலைவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் குடியரசு தலைவர் -வீடியோ

Oneindia Tamil 2017-10-28

Views 13.1K

பாஜக தலைவர்கள் சிலரின் வெறுப்பரசியலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அடுத்தடுத்து அடி கொடுத்து வருகிறார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் சமீபத்திய அடுத்தடுத்த கருத்துக்கள், பேச்சுகள், பாஜக தலைவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் பின்புலத்திலிருந்து பாஜகவில் செயல்பட்டவரான ராம்நாத் கோவிந்த், குடியரசு தலைவர் என்ற முறையில், வெறுப்பரசியலை உடனுக்குடன் கண்டிப்பவராக மாறியுள்ளார். இந்த வகையில் முந்தைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை காட்டிலும், ராம்நாத் கோவிந்த்தின் கருத்துக்களை பாஜகவினர் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முதலில் தனது அதிரடி கருத்தாகக அறியப்பட்டது ஹிந்தி திணிப்பு குறித்த பேச்சுக்காகத்தான். தென் மாநிலங்களில் மத்திய அரசு ஹிந்தியை திணிப்பதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். ஹிந்தி எதிர்ப்பு போரை மீண்டும் திமுக முன்னெடுக்க தயங்காது என அவர் எச்சரித்தார்.

President Ram Nath Kovind on Friday termed Kerala the global face and digital power house of the country.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS