இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் 2016ஆம் ஆண்டு ஊக்கமருந்து பயன்படுத்தி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது சர்வதேச போதை மற்றும் ஊக்கமருந்து தடுப்பு பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடத்த சோதனையின் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் இந்திய கிரிக்கெட்டை சேர்ந்த ஒரு வீரருக்கு முடிவுகள் ''பாசிட்டிவ்'' என வந்து இருக்கிறது. இதன்முலம் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் 2016ல் நடந்த எதோ ஒரு போட்டிக்காகத்தான் ஊக்கமருந்து பயன்படுத்தி இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து விரிவான அறிக்கை சர்வதேச போதை மற்றும் ஊக்கமருந்து தடுப்பு பிரிவால் பிசிசிஐக்கு அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
The World Anti-Doping Agency gave a report of 2016 has revealed that one player from Indian team has tested positive for banned substances among BCCI accreditated cricketers.