2013ல் நடந்த ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிஎஸ்கே அணி குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து சிஎஸ்கே அணிக்கு 2015ல் தடை விதிக்கப்பட்டது. இதன்காரணமாக 2017 வரை சிஎஸ்கே அணியால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாமல் போனது.
இந்த நிலையில் இந்த சூதாட்ட குற்றச்சாட்டு குறித்த விசாரணையின் போது நடந்த சில சம்பவங்கள் குறித்து டோணி தற்போது பேசியிருக்கிறார். மேலும் சிஎஸ்கே அணியில் நடந்த யாருக்கும் தெரியாத சில விஷயங்களையும் அவர் பேசியிருக்கிறார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்த விசாரணையில் நான் கூறியதாக சொல்லப்பட்ட சில விஷயங்கள் பொய் என தற்போது பகிரங்கமாக கூறியிருக்கிறார் டோணி.
ஒருகாலத்தில் பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேவரைட் அணியாக இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2013ல் நடந்த ஐபிஎல்லில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சிஎஸ்கே அணிக்கு 2015ல் தடை விதிக்கப்பட்டது.
Indian cricketer Dhoni speaks about what he said to IPL council years back. He also added that Meiyappan has nothing to do with cricket and Chennai Super Kings team.