இரண்டாவது ஒருநாள் போட்டியில் திணறும் நியூசிலாந்து-வீடியோ

Oneindia Tamil 2017-10-25

Views 3.4K

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்து கொண்டு இருக்கிறது. மிக முக்கியமான இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி திணறி வருகிறது.

மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் 280 ரன் ஸ்கோரை எளிதாக கடந்து வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. இதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டி கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வைக்கிறது. இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான மிக முக்கியமான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது புனேயில் நடந்து கொண்டுஇருக்கிறது

The second ODI match between India and New Zealand will be held to today in Pune. New Zealand won the toss and choose to bat first

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS