பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த பரிந்துரை அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மேலும், பசுவை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போது ராஜஸ்தானில் உள்ள சட்டப்படி பசுவை கொன்றவர்கள் என்று நிருபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
Rajasthan High Court said the cow should be declared as a national animal.