Movie Name : Dharisanam – 1970
Song Name : Idhu Maalai Nerathu
Music : Soolamangalam Rajalakshmi
Singers : TM Soundararajan, LR Eswari
Lyricist : Kannadasan
.
இது மாலை நேரத்து மயக்கம்
பூமாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலெ இதழ் மோதும்
அந்த இன்பம் தோன்றுது எனக்கும் (இது)
இது காலதேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்னும்
பெறப் போகும் துன்பத்தின் துவக்கம் (இது)
பனியும் நிலவும் பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தாலென்ன பசும் பாலை போல
மேனி எங்கும் பழகிப் பார்த்தாலென்ன
உடலும் உடலும் சேரும் வாழ்வை
உலகம் மறந்தாலென்ன
தினம் ஒடியாடி ஒயுமுன்னே
உன்மை உணர்ந்தாலென்ன
உறவுக்கு மேலெ சுகம் கிடையாது
அணைக்கவெ தயக்கமென்ன
இது ஒட்டை வீடு ஒன்பது வாசல்
இதற்குள்ளே ஆசையென்ன (இது)
முனிவன் மனமும் மயங்கும் பூமி
மோக வாசல் தானெ
தினம் மூடி மூடிஒடினாலும்
தேடும் வாசல்தானெ
பாயில் படுத்து நோயில் விழுந்தால்
காதல் கான்ல் நீரே
இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்
போகும் ஞானத்தேரே
இல்லறம் கேட்டால் துறவரம்
பேசும்இதயமே மாறி விடு
இது ஆடி ஒடி சாய்ந்த தென்னை
உன்னை நீ மாற்றி விடு
இது காலதேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்.
ஒரு ஆணும் ஒரு பெண்னும்
பெறப் போகும் துன்பத்தின் துவக்கம் (இது)