I wish to inform that this rendition by my beloved wife Saroja who went to the Heavens on 19 February 2014 is the only one published, so far, in this World. Around 1987/88, when we went to Kanchi Mutt with this song, Great Saint Sri Chandrasekhara Swamigal who was in Chaturmasya (Mowna)Vratha blessed us after we prostrated before him . Later we showed the verse to Sri Jayendra Saraswathi Swamigal. After reading it, he suggested that we print out small booklets with this song and donate the proceeds to the Mutt. Due to one reason or the other, I'm sorry, I am yet to do that. Anyway, I have named my Dialmotion webpage "sarohubby" to show how she is inseparable from me, spiritually. சுமங்கலி பிரார்த்தனை
சதுர்முகுந்தன் தேவியாரே ஸரஸ்வதி தாயே
சந்ததமும் எந்தனுடன் நாவில் வாழம்மா
பரிபூரணி பஞ்சாக்ஷரி பார்வதித்தாயே
என்றும் பிரியாத மாங்கல்ய பிக்ஷையிடம்மா
கொத்துடன் தான் செவ்விளநீர் கொங்கையுள்ளாரே
குலவாழும் கைலாச நாதன் நாயகி
மெத்தடங்கும் மொழியாளே வாவென்றழைத்து
மடிகோரி மாங்கல்ய பிக்ஷையிடம்மா
முத்தணிந்த மார்பினாளே மூவர் தாயாரே
முக்கண்ணன் தேவியாரே பார்வதித்தாயே
சிக்கண்ணன் சிவனருளாலே வாழவேண்டும்
ஸ்திரமாக மாங்கல்ய பிக்ஷையிடம்மா
ஆருஜடைமேலிருக்கும் அலங்காரியே
ஐந்துதலை நாகம் பூண்டாடும் தேவியே
பொன்னுடனே பொற்பாதம் கொடுக்கும் தாயாரே
என்றும் பிரியாத மாங்கல்ய பிக்ஷையிடம்மா
மாதாவே தாயாரே பார்வதித்தாயே
மண்ணில் வாழும் மஹாதேவநாதன் நாயகி
தாரம் நீ ஒழிய வேரொருவரில்லையே
மாதாவே மாங்கல்ய பிக்ஷையிடம்மா
ஆதியந்தம் அற்றவளே அன்னமே தாயே
அரனென்கும் கைலாச நாதன் நாயகி
தேன்ரஸம் உள்ள தாயே எந்தனிடத்தில்
ஸ்திரமாக மாங்கல்ய பிக்ஷையிடம்மா
பொன்னான நாயகியே பார்வதித்தாயே
எண்ணா மலைகள் தோறும் வளர்ந்தாயே
கண்ணாரக்காட்சியுள்ளோர் ஆசை தீர்த்தாயே
ஸ்திரமாக மாங்கல்ய பிக்ஷையிடம்மா
காவல் கொள்ளும் மணவாளனாய்க் கைபிரியாது
அக்னி முன்பாகவே வலக்கைப் பிடித்த
அன்பான கணவருக்குப் பின் பிரியாமலே
ஸ்திரமாக மாங்கல்ய பிக்ஷையிடம்மா
வந்தவினை போக்கிவைத்து வாழ்வையும் தந்து
மனஸ்தாபம் தீர்ப்பாயம்மா நீயிரங்கியே
ஏழைக்கிரங்கம்மா எந்தன் மாதாவே
என் மேல் கிருபை பாரு பார்வதித்தாயே
தந்தையோடு தாயாரும் தானுமாகவே
ஸந்தான சம்பத்தையும் தந்தருளம்மா
ஒத்த உடன்பிரப்பையும் தந்தருளம்மா
என்றும் பிரியாத மாங்கல்ய பிக்ஷையிடம்மா
வந்தவினை போக்கிவைத்து வாழ்வையும் தந்து
மற்ற வேறு சத்துருக்கள் வந்தண்டாமலே
புத்திரர்களையும் பாக்யத்தையும் தந்தருளம்மா
என்றும் பிரியாத மாங்கல்ய பிக்ஷையிடம்மா
வாழ்வுமுண்டாம் சோர்வுமுண்டாம் சிதருமுண்டாம்
மாதாவுந்தனிடத்தில் பக்தியுமுண்டாம்
எந்தனுடைய பெண்குறையைத் தீர்த்தருளம்மா
என்றும் பிரியாத மாங்கல்ய பிக்ஷையிடம்மா
சுபம்
"முத்தணிந்த மார்பினாளே மூவர் தாயாரே" இதன் பொருள் என்னைக் குழப்புகிறது. என் மனைவியோ பிடிவாதமாக தான் சொன்ன வார்த்தைகள் அப்படித்தான் இருக்கின்றன என்று பிடிவாதமாக சொல்லிக் கொண்டிருந்தாள். எனக்கு ஒரு எண்ணம் உதயமாயிற்று.
கேழ்ப்பாரில்லாமல் அழுது கொண்டிருந்த குழந்தை திருஞானசம்பந்தரை
அம்மையார் அன்பும் அருளுடன் எடுத்துக்கொண்டு பாலூட்டினார் என்று சொல்லப் படுகிறதே அதை சிலேடையாகக் குறிக்கின்றதோ?