கடந்த 07.072013 அன்று கிண்ணியாவில் பிறை பார்த்த அடிப்படையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் பிறை அறிவிப்பை மேற்கொண்டது இதனடிப்படையில் நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் நேற்று வியாழக் கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடினார்கள். இப்படி நாம் பெருநாள் கொண்டாடியது தவறானது என்றும் பெருநாள் கொண்டாடியவர்கள் தவ்பா செய்ய வேண்டும் என்றும் ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி அவர்கள் நேற்று வானொலி மூலம் ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார்.
இதில் கிண்ணியாவில் பிறை பார்த்தாக கிண்ணியா ஜம்மிய்யதுல் உலமா சபை அறிவித்ததாக வெளியாகிய கடிதம் பொய்யானது என்றும், அந்தக் கடிதத்தில் ஜம்மிய்யதுல் உலமாவின் தலைவர் சகோ.ஹிதாயதுல்லாஹ் அவர்கள் போட்டதாக கூறப்பட்ட கையொப்பம் அவருடையதல்ல. மாறாக திட்டமிட்டு பொய்யாகப் போடப்பட்டது. என்றும் ரிஸ்வி முப்தி தனது உரையில் தெரிவித்தார்.
இது அப்பட்டமான பொய்யும், அவதூறும் இட்டுக் கட்டுமாகும்.
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தியின் அறிவிப்புக்கு ஜம்மிய்யதுல் உலமாவின் கிண்ணியா கிளை தலைவர் வெளியிட்ட அறிக்கை அடங்கிய வீடியோவை பாருங்கள்.